தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முடக்கிவிட்டிருக்கும் நிலையில், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடம் பிடித்த ஹரி நாடாரும் ஹீரோவாக களம் இறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிலோ கணக்கில் கழுத்து கை என உடல் முழுவதும் நகைகளுடன், நடமாடும் நகைக்கடைப் போல வலம் வரும் ஹரி நாடாரை பலர் சினிமாவில் நடிக்க அழைத்திருக்கிறார்களாம். ஆனால், அப்போதெல்லாம் மறுத்தவர் தற்போது தனக்கான சரியான கதை அமைந்தால் ஹீரோவாக நடிக்க ரெடி, என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
வட்டி தொழில் செய்து வரும் ஹரி நாடார், பல்வேறு திரைப்படங்களுக்கும் பைனான்ஸ் செய்து வருவதால், சினிமா பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம், அந்த வகையில் தான் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியுடனும் பழக்கம் ஏற்பட்டதாம்.
இதெல்லாம் சரி, இப்படி நடமாடும் நகைக்கடையாக வலம் வர, என்ன காரணம், என்று பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு, சின்ன வயதில் இருந்தே நீண்ட தலை முடி வளர்க்க வேண்டும், அதிகமான தங்க நகைகள் அணிய வேண்டும் என்பது ஆசை. அப்போது வசதி இல்லாததால் முடியை மட்டும் வளர்த்துக் கொண்டேன், தற்போது வசதி வந்துவிட்டதால் தங்க நடிகைகளையும் அணிய தொடங்கிவிட்டேன், என்று பதில் அளித்துள்ளார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...