Latest News :

’கைதி’, ‘பிகில்’ படங்களால் நஷ்ட்டமா, லாபமா? - உண்மை நிலவரம் இதோ
Wednesday November-06 2019

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான கார்த்தியின் ‘கைதி’ மற்றும் விஜயின் ‘பிகில்’ இரு படங்களி வசூல் நிலவரங்கள் பற்றி பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இவ்விரு படங்களினாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபமா அல்லது நஷ்ட்டமா? என்ற உண்மை தகவலை பிரபல விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிர்மணியம் வெளியிட்டுள்ளார்.

 

கலவையான விமர்சனங்களைப் பெற்ற விஜயின் ‘பிகில்’ மூன்று நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துவிட்டதாக கூறப்பட்டதோடு, அப்படத்தினால் தங்களுக்கு லாபம் தான் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா கூறிவிட்டார். அதே சமயம், விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்ற கார்த்தியின் ‘கைதி’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, திரையரங்க எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு தரப்பு கூறி வருகிறது.

 

மேலும், உலகம் முழுவதும் கைதி வெளியாகி 12 நாட்களில் ரூ.80 கோடி வசூலித்திருப்பதாக அப்படக்குழு தெரிவித்த்திருக்கும் நிலையில், பிகில் தரப்போ அப்படம் ரூ.230 கோடி வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 

இது உண்மை தானா? என்பது குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பிரபல வார இதழின் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ‘கைதி’ குறைந்த பட்ஜெட்டில் எடுத்தப் படம், மேலும், அப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சொந்தமாகவே ரிலீஸ் செய்தார். தற்போது இரட்டிப்பு லாபத்தையும் அவர் ஈட்டி வருகிறார்.

 

பிகில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். படத்திற்கு எதிர் மறையான விமர்சனக்கள் எழுந்தாலும், விநியோகஸ்தர்களின் கையை கடிக்காமல், அவர்கள் போட்ட பணம் திரும்பி வந்துவிட்டது. ஆனால், பெரிய தொகை கொடுத்து வாங்கி, போட்ட பணமே திரும்பி வந்ததால், அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு என்ன பயன். எனவே, விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் புகழ்பாடும் படங்களில் நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால், அப்படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும். எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும், பிகில் படத்தால் யாருக்கும் நஷ்ட்டம் ஏற்படவில்லை. அதே அப்படம் நல்ல கதையம்சக் கொண்ட படமாக இருந்தால், அப்படத்தின் வியாபாரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் லாபம் கிடைத்திருக்கும். தற்போது அது நடக்கவில்லை.

 

Tirupur Subramaniyam

 

எனவே, ஹீரோக்கள் கதை தேர்வில் கவனல் கொள்ள வேண்டும். மாரி படம் ஓடவில்லை ஆனால், ‘அசுரன்’ படம் ஓடுகிறது. இதை வைத்தே புரிந்துக்கொள்ள வேண்டும் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று, என்று தெரிவித்துள்ளார்.

 

ஆக, கைதி படம் லாபம் கொடுத்திருக்க, விஜயின் பிகில் லாபமும் கொடுக்கவில்லை, நஷ்ட்டத்தையும் கொடுக்கவில்லை, என்பது தான் தற்போதைய உண்மையான நிலவரம்.

Related News

5831

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery