Latest News :

’ஆதித்ய வர்மா’ படத்திற்கு மீண்டும் சிக்கல்!
Wednesday November-06 2019

நடிகர் விகரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுமாக உள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ முதலில் ‘வர்மா’ என்ற தலைப்பில் பாலா இயக்கிய நிலையில், படம் முழுவதும் முடிந்த பிறகு படம் சரியில்லை என்று தயாரிப்பு தரப்பு கூறியதோடு, படத்தை குப்பையில் போடப்போவதாகவும் அறிவித்தது.

 

இதையடுத்து இயக்குநர் பாலாவுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சில பல பஞ்சாயத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் முதலில் இருந்த படத்தை எடுக்க தொடங்கினார்கள். ‘ஆதித்யா வர்மா’ என்ற தலைப்பில், அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசாயா படத்தை இயக்கினார். நடிகர் விக்ரம் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

 

படம் முடிவடைந்து இசை வெளியீட்டு விழா, தினசரி பத்திரிகையாளர்கள் சந்திப்பு போன்ற புரோமோஷன் வேலைகளும் ஜோராக நடந்தது. படம் நவம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் என்று தயாரிப்பு தரப்பும் அறிவித்துவிட்டது.

 

இந்த நிலையில், படம் நவம்பர் 8 ஆம் தேதிக்கு ரீலீஸ் ஆகவில்லை. காரணம், படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது தான். எப்படியாவது யு/ஏ சான்றிதழ் பெற்ற பிறகே படத்தை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பு தரப்பு பிடிவாதம் பிடிப்பதோடு, மறு தணிக்கைக்கும் படத்தை அனுப்ப இருக்கிறதாம். அதனால், நவம்பர் 29 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

ஏற்கனவே ஒரு முறை தனது மகனின் படம் குப்பைக்கு போனதால் வருத்தத்தில் இருந்த நடிகர் விக்ரம், தற்போது இரண்டாவது முறையாகவும் மகனின் படத்தின் ரிலிஸில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.

Related News

5832

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery