1960 ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல்ஹாசன், தற்போது ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியின் தலைவராக திகழ்கிறார்.
”என்றைக்குமே தான் அரசியலில் ஈடுபட மாட்டேன்”, என்று கூறிவந்த கமலையும் அரசியல் பக்கம் இழுத்துவிட்டது சூழ்நிலை. அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நேசிக்கும் சினிமாவையும் விடாமல், தொடரும் கமலுக்கு இன்று 65 வது பிறந்தநாள்.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன், நடிகராக போடாத வேஷமே இல்லை என்று சொல்வதைவிட, ஒரு நடிகராக இவர் போல் இதுவரை யாரும் இத்தனை வேஷங்கள் போட்டதில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும்.
இந்த பூமியில் தான் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
தற்போது கூடுதலாக அரசியல் கட்சி மூலம் உள்ளூர் மக்களின் ஆட்சி தலைவராவதற்கான முயற்சியில் ஈடுபட்டாலும், உலகநாயகனாகவும் மக்களை குஷிப்படுத்தி வருபவரின், எதிர்கால திட்டங்கள் வெற்றி பெற, cinemainbox.com சார்பில் வாழ்த்துவோம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...