’கங்காரு’, ‘வந்தா மல’, ’ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகை ஸ்ரீ பிரியங்கா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் இப்படம் பெண் காவலர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் படத்தையும், அதில் நடித்த ஸ்ரீ பிரியங்கா குறித்தும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். படம் நாளை (நவ.8) வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, படத்தையும், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரியங்கா, பெண் காவலரை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
மேலும், ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், ஸ்ரீ பிரியங்கா ஆசி பெற்றார். இந்த சந்திப்பின் போது நடிகை ஸ்ரீ பிரியங்காவின் பெற்றோரும் உடன் இருந்தார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...