நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது சொந்த ஊரான பரமக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசன் தனது குடும்பத்தோடு பரக்குமுடியில் தங்கியுள்ளார்.
கமல்ஹாசனுக்கு சினிமா பிரபலங்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில், அவரது அண்ணன் சாருஹாசன், அவரது மகளும் நடிகையுமான சுஹாசினி, கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் உள்ளிட்ட பலர் இருக்க, நடிகை பூஜா குமாரும் இருக்கிறார்.
அமெரிக்காவில் வாழ்ந்துக் கொண்டிருந்த பூஜா குமார், ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்ததன் மூலம் சென்னை வந்தார். தொடர்ந்து கமலின் சில படங்களில் நடித்த அவர், கமலுடனேயே செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. இது வெறும் கிசுகிசுவாக இருந்த நிலையில், தற்போது இந்த புகைப்படம் மூலம் உறுதியாகிவிட்டது.
பூஜா குமரை கமல்ஹாசன், தனது குடும்ப நபராக்கிக் கொண்ட புகைப்படம் இதோ,

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...