Latest News :

தனுஷுக்கு தலைவலியைக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
Friday November-08 2019

’அசுரன்’ படம் மூலம் ரூ.150 கோடி வசூல் ஹீரோ பட்டியலில் இணைந்திருக்கும் தனுஷ், டாப் 3 ஹீரோக்கள் பட்டியலிலும் இடம் பிடித்துவிட்டார். இதனால் தனுஷ் ஏரியாவுக்கு புது உற்சாகம் பிறந்திருக்கிறதாம். ஆனால், இந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள், பிரபல தயாரிப்பாளர் தனுஷுக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறார்.

 

ஆம், தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மூலம் தனுஷ், தற்போது தலைவலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம்.

 

தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் மாதம் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தியாகராஜன் முடிவு செய்திருந்தார். ஆனால், ‘அசுரன்’ படத்தின் வெற்றியால் தனது முடிவை மாற்றிக் கொண்டவர், ரஜினியின் ‘தர்பார்’ படம் வெளியாகும் பொங்கல் பண்டிகையின் போது தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தையும் வெளியிட முடிவு செய்துவிட்டாராம்.

 

ரஜினிகாந்த் படத்திற்காக அத்தனை நடிகர்களும் வழிவிட்டு நிற்க, தனது படம் குறுக்கிட்டால் நல்லா இருக்காது, என்று தனுஷ் அதை தவிர்க்குமாறு கூறினாலும், தனது ‘விஸ்வாசம்’ ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் மோதி வெற்றி பெற்றதை மனதில் வைத்துக் கொண்டு, பொங்கல் தொடர் விடுமுறையின் போது ‘பட்டாஸ்’ படத்தை வெளியிடுவதில் தீவிரம் காட்டும் தயாரிப்பாளார் தியாகராஜன், தனுஷையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

 

Producer Thyagarajan and Pattaas

 

தயாரிப்பாளர் தியாகராஜனின் இந்த பிடிவாதத்தால், தனுஷ் தான் தற்போது தலைவலியை அனுபவித்துக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Related News

5838

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery