‘தர்பார்’ படம் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் புதுப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஈடுபட உள்ளார்.
அதே சமயம், வரும் டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு வெளியாகும், என்றும் அவரது ரசிகர்கள் எதிர்ப்பரத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று பா.ஜ.க-வுக்கு எதிராக துணிச்சலான தனது முடிவை அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் கட்டிட திறப்பு விழா மற்றும் இயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”திருவள்ளூவரைப் போல என் மீதும் காவி சயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளூவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த ஸ்டேட்மெண்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...