பிக் பாஸ் சீசன் 3 யின் பேவரைட் போட்டியாளராக இருந்த தர்ஷன், டைடில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஏராளமான் ரசிகர்களையும், சினிமா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார். தற்போது இலங்கையில் இருக்கும் தர்ஷன், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
இந்த நிலையில், தர்ஷனின் காதலி என்று சொல்லிக் கொண்ட நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து அவ்வபோது பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். தர்ஷன் தற்போது சனம் ஷெட்டியுடன் காதலில் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், இந்த பதிவுகள் இருக்கின்றன.
அந்த வகையில், சனம் ஷெட்டி தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில், நான் அதிகமாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், தவறான நபரிடம் கேட்டுவிட்டேன். யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், அவர்களுக்கு காலம் பதில் சொல்லும், என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, தர்ஷன் தனது வாழ்வில் இல்லை, என்று கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், அவரிடம் சேர்ந்து சுற்றினார். தற்போது இலங்கைக்கு சென்றிருக்கும் தர்ஷன், சனம் ஷெட்டியுடனான உறவை முறித்துக் கொண்டதாலயே, சனம் ஷெட்டி இப்படி பேசி வருகிறார், என்று கூறப்படுகிறது.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...