சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்திருக்கும் ‘ஆக்ஷன்’ திரைப்படம் தலைப்புக்கு பொருத்தமாக முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பதோடு, ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தரத்திலான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. தமன்னா, அகன்ஷபூரி என இரண்டு ஹீரோயின்களும் விஷாலுக்கு நிகராக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருப்பது இப்படத்தில் கூடுதல் சிறப்பு.
உலகின் பல்வேறு நாடுகளி படமாக்கப்பட்டிருக்கும் ‘ஆக்ஷன்’ வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே நேற்று இரவு ஆக்ஷன் படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, “இப்படி ஒரு ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. என் படங்கள் அனைத்திலும் காமெடி அதிகமாக இருக்கும். காமெடி தான் மிகப்பெரிய கஷ்ட்டம், அதையே நான் சாதாரணமாக கையாள்வதால், மற்ற அனைத்தும் எனக்கு எளிமையானது தான். என் படங்களில் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த ஆக்ஷனுக்கும், ‘ஆக்ஷன்’ படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இது ஒரிஜினலான ஆக்ஷன். அனைத்தும் அட்வெஞ்சர்ஸாக வரும் ஆக்ஷன் காட்சிகள்.
இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததும், என் நினைவுக்கு வந்தது விஷால் தான். அவரை தவிர வேறு யாராலும் இந்த படத்தில் நடிக்க முடியாது. காரணம், விஷால் எதை சொன்னாலும் கேட்பார், மற்றொருன்று ஆக்ஷன் படத்திற்கான முழு தகுதியும் அவரிடம் தான் இருக்கிறது. இப்படத்தின் கதை அவரிடம் சொன்னதை விட ஆக்ஷன் காட்சிகளை சொல்லி தான் சம்மதிக்க வைத்தேன். அவரை சம்மதிக்க வைக்க தான் கொஞ்சம் கஷ்ட்டம், ஆனால் அவர் ஓகே சொல்லிவிட்டு படத்திற்குள் வந்துவிட்டால், நாம் எதை சொன்னாலும் கேட்பார். பெரிய பில்டிங்கிள் இருந்து குதி என்று சொன்னாலும் குதித்துவிடுவார், இந்த படத்தில் அப்படி குதித்திருக்கிறார். அவர் ஒரு இயக்குநரின் நடிகர். இந்த படத்திற்காக விஷால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார். பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இப்படி ஒரு படத்தை 6 மாதத்தில் முடித்திருப்பது விஷாலால் மட்டும் தான் முடியும். அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் டிரைடெண்ட் ரவீந்தரன் சாருக்கும் நன்றி.
இந்த படத்தில் வில்லன், வில்லி என இருவரும் இருக்கிறார்கள். வில்லன் யார்? என்பது தான் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ். அவரை தேடி விஷால் செல்லும் காட்சிகள் அனைத்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும். ஆக்ஷன் மட்டும் அல்ல, நமது பேவரைட் காமெடியும் படத்தில் இருக்கிறது. யோகி பாபு, லண்டனில் உள்ள ஹக்கராக நடித்திருக்கிறார். இதை சொல்லும் போதே தெரிகிறதா, படத்தின் காமெடி. படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.
விஷால் பேசுகையில், “சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார். ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும்.
ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.
எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி.
‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி அனைவரிடமும் பேசப்படுவார் என்றார்.ஒரெ ஒரு வேடுகோள், ஒவ்வொருத்தரும் மற்றவர்க்கு ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...