‘பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் விஜயின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.
விஜயின் ஆரம்பகால திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த இவர்கள், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...