பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில், 4 வது சீசனுக்காக சேனல் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் தற்போது பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருவதோடு, சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 3-யில் இளசுகளின் காதல் தான் ஹைலைட்டாக அமைந்தது. குறிப்பாக கவின் - லொஸ்லியா காதலும், அதற்கு சேரன் தெரிவித்த எதிர்ப்பும், போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், லொஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, லொஸ்லியாவை திட்டி தீர்த்தார். அவரது இந்த செயலை பார்க்கும் போது சேரன், செய்தது சரிதான், என்று ரசிகர்கள் கருத்து கூறினார்கள்.
தற்போது பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்து போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், சேரன் மட்டும் இதுவரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்த கவின் - லொஸ்லியா காதல் பற்றியும் எதுவும் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கவின் - லொஸ்லியா பிக் பாஸ் காதல் பற்றி இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.

”கவினின் குடும்ப சூழல் எனக்கு தெரியும், லொஸ்லியாவின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொண்டே. அதனாலேயே அவர்கள் இருவரும் நெருக்கம் காட்டுவதை நான் விரும்பவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவருமே தங்களது வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும், என்று நான் விரும்பினேன். ஆனால், அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது காதல் எதிர்காலத்தை பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஆனால், இதை கவின் தவறாக புரிந்துக் கொண்டு நான் நடிக்கிறேன் என்று நினைத்துவிட்டார். ஆனால், வெளியே இருந்து பார்த்த ரசிகர்கள் என்னை நன்றாக புரிந்துக் கொண்டார்கள்” என்று சேரன் பேசியுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...