Latest News :

பைரசிக்கு எதிராக 24 மணி நேர இடைவிடாத சாதனை பிரச்சாரம்!
Thursday September-14 2017

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும்  சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ’ஹீரோ டாக்கீஸ்’ ’ஷூட் தி பைரேட்ஸ்’ என்ற 24 மணி நேரம் இடை விடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்க உள்ளனர்.

 

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும்  இந்த பிரச்சாரத்தில், தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல்கள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் ஆகியவை சினிமா பிரபலங்களோடும், பிரபலங்கள் தலைமையிலும் நடத்தப்பட உள்ளது. இந்த ’ஷூட் தி பைரேட்ஸ்’ நிகழ்வு  ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Asia Book Of Records) மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Indian Book Of Records) ஆகியவையால் ‘Longest Anti Piracy Campaign’ என அடையாளம் காணப்படவுள்ளது.

 

இந்த காம்பைனில் பல சினிமா சாதனையாளர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த ’ஷூட் தி பைரேட்ஸ்’ நிகழ்வை 'மீசைய முறுக்கு'' புகழ் RJ விக்னேஷ் தொகுத்து வழங்கவுள்ளார். 

ஒரு படம் எடுக்க சந்தித்தாக வேண்டிய சிரமங்கள், தமிழ் சினிமாவை எந்த அளவிற்கு பைரசி பாதிக்கின்றது, தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தில் சினிமா வணிகம் எப்படியுள்ளது, பைரசியை தடுக்க தேவையான நடவடிக்கைகள், தமிழ் சினிமாவின் தற்போதய ட்ரெண்ட்டுகள் மற்றும் தமிழ் சினிமா துறையின் டிஜிட்டல்  பரிமாணம்  போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளன.

Related News

585

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery