தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் என்பதால், அவரை நடிக்க வைக்க தென்னிந்திய சினிமா முழுவதுமே முயற்சித்து வந்தாலும், அதில் சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள்.
இதற்கிடையே, அடுத்த வருடம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சில பல கோடிகளோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தயாரிப்பில் ஈடுபட நயன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது கதைகளைக் காட்டிலும் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.
இதனை அறிந்த பிரபல கல்வியாளரான ஐசரி கே.கணேஷ், தான் தயாரிக்கும் படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்குவதற்காக வலைவீச, நயனும் அதில் சிக்கிக்கொண்டாராம்.
அதாவது, ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ‘எல்.கே.ஜி’ என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி, அவரது தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதோடு, அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அறிமுக இயக்குநர் ஒருவருடன் இணைந்து இயக்கவும் செய்கிறார்.
‘மூக்குத்தி அம்மன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியதும், ஒட்டுமொத்த கோலிவுட்டே அதிர்ச்சியானது. காரணம், லேடி சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் உள்ள நயன், எப்படி ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார், என்பது தான்.
இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரமா அல்லது பாலாஜிக்கு ஜோடியா என்பது தெரியவில்லை. ஆனால், இப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம், ஐசரி கே.கணேஷ் வழங்கிய சம்பளம் தானாம்.
பாலாஜி நயன்தாராவிடம் கதை சொல்ல போவதற்கு முன்பாக, அவரை தொடர்பு கொண்ட ஐசரி கே.கணேஷ், தரப்பு இரண்டு மடங்கு சம்பளம் கொடுப்பதாக கூறினார்களாம். அதனை தொடர்ந்து கதை கேட்ட நயன்தாரா பாலாஜியிடம் ஓகே சொல்லிவிட்டாராம்.
தனது கதை பிடித்துப் போனதால் தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாக பாலாஜி தனது நட்பு வட்டாரத்தில் தெரிவித்திருக்கிறாராம்.
ஆனால், உண்மை அதுவல்ல, இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ஐசரி கே.கணேஷ் ரூ.8 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியதால் தான் அவர் ஒப்புக்கொண்டதாக கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...