Latest News :

டிசம்பர் மாதம் ரிலிஸாகும் மிஷ்கினின் ‘சைக்கோ’!
Tuesday November-12 2019

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘சைக்கோ’ படத்தில் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தை டிசம்பர் 27 ஆம் தேதி வெளியிட படகுழு முடிவு செய்துள்ளது.

 

ஹீரோயின்களாக நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கும் அருண்மொழி மாணிக்கம் படம் குறித்து கூறுகையில், “ஆரம்பம் முதல் சைக்கோ’ திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் தற்காலத்தில் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்தோம்.

 

இப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக்கொள்ளும் தருணங்கள் படமுழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

 

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இசை இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.” என்றார்.a

Related News

5857

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery