ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதற்கான பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் இசையமைப்பாளர் அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சி உள்ளிட்ட சில கலை நிகழ்ச்சிகளோடு பிரம்மாண்டமான கலை விழா போல நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.
இத்துடன், எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாராவை இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியிலும் ‘தர்பார்’ படக்குழு ஈடுபட்டுள்ளதாம்.
இது நடந்துவிட்டால் தமிழ் சினிமாவில் நடைபெற்ற மிகப்பெரிய அதிசயம் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவாகத்தான் இருக்கும்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...