ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து தமிழகத்தில் திரைப்படங்களுக்கு இருந்த வரி விலக்கு சலுகை ரத்தானதால், யு சான்றிதழ் வாங்குவதற்கு எந்த தயாரிப்பாளரும் முனைப்பு காட்டுவதில்லை. அதேபோல், படத்தின் தலைப்பையும் கண்ணாபின்னாவென்று வைக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தணிக்கை குழு தனது படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரொம்ப சந்தோஷப்பட்டுள்ளாராம்.
அவர் தயாரித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம் ஆபசமாக உருவாகியுள்ளது. கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. டிரைலர் முழுவதுமே ஒரே ஆபாசமான வசனங்களாக இருந்தது. டிரைலரே இப்படி என்றால் முழு படம் எப்படி இருக்குமோ! என்று பலர் அச்சப்படுகிறார்கள்.
ஆனால், படத்தை தயாரித்த ஞானவேல்ராஜா எந்தவித கூச்சமும் இன்றி, ஏதோ சமூகத்தை திருத்துவது போன்ற ஒரு படத்தை எடுத்துவிட்டது போல ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். காரணத்தை விசாரித்தால், சமீபத்தில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்களாம். ஏ இருந்தால் தான் எங்ஸ்டர்கள் தியேட்டர் உள்ளே வருவார்கள் என்ற எண்ணத்தில், தனது படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை ஞானவேல்ராஜா சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாராம்.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...