தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அதர்வா, ‘பரதேசி’, ‘ஈட்டி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததை தொடர்ந்து ‘செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த இப்படத்திற்குப் பிறகு, இனி படம் தயாரிப்பில் ஈடுபடப்போவதில்லை என்று அதர்வா முடிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரான எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில், அதர்வா நடித்த ’செம போத ஆகாதே’ என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதமானதால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் ’மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடித்து தருவதாக அதர்வா கூறினார்.
ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...