Latest News :

49 வயதில் ரொமாண்டிக் படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
Wednesday November-13 2019

ஹீரோயின், வில்லி, குணச்சித்திர வேடம் என்று எந்த வேடமாக இருந்தாலும் அதில் தனது திறமையை காட்டி பாராட்டு பெற்றுவிடுபவர் ரம்யா கிருஷ்ணன். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் முக்கியமான குணச்சித்திர நடிகையான ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்தார்.

 

இந்த நிலையில், 49 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் ‘ரொமாண்டிக்’ என்ற தெலுங்குப் படத்தில் வித்தியாசமான வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

 

காதல் பிளஸ் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஆகாஷ் பூரி, கித்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின், போஷன் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.

 

இதற்காக, ‘ரொமாண்டிக்’ படக்குழு ரம்யா கிருஷ்ணனுடன் கோவாவில் முகாமிட்டிருப்பதோடு, தொடர்ந்து 30 நாட்கள் ரம்யா கிருஷ்ணனின் காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம்.

Related News

5864

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery