’பிகில்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படத்தில் நடித்து வரும் விஜய், தற்போது டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் விஜய் கல்லூரி மாணவராக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயின் 65 வது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது. அதாவது விஜயின் 65 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கும் நிலையில், அந்த வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேணிக்கு கிடைத்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
‘தடையற தாக்க’, ‘மீகாமன்’, ‘தடயம்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் மகிழ் திருமேணி, விஜயிடம் ஒரு கதை சொல்லியதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட, அதையே அவர் தனது 65 வது படமாக பண்ண முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...