‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ஜடா’. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் எடிட்டிங் செய்திருக்கிறார்.
வரும் டிசம்பம் 6 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் குமரன் கூறுகையில், “தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம். திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்பதே கதை.

இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத 7's கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாக இருக்கும்.” என்றார்.
சமீபத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெளியான விஜயின் ‘பிகில்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் ‘ஜடா’ விளையாட்டை மையமாக வைத்து வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...