பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, அப்போட்டியில் பங்கேற்ற சில போட்டியாளர்களிடம் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில், மலேசியாவை சேர்ந்த முகேன், இலங்கையை சேர்ந்த தர்ஷன், லொஸ்லியா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாண்டி, கவின் ஆகியோர் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளர்களாக உள்ளனர்.
பிக் பாஸ் டைடிலை வென்ற முகேன், தற்போது மலேசியாவில் உள்ளார். இவர் இசைத்துறையில் உள்ளதால் அத்துறையில் தற்போது புதிய சாதனைகளை நிகழ்த்தவும், அதில் தொடர்ந்து பயணிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல், தற்போது முகேனின் வாழ்க்கை வரலாற்றை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்க இருக்கிறது.
முகேன் பற்றி இதுவரை யாரும் அறியாத பல ரகசியங்களை தொகுத்து சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...