பைரசிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வர, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இண்டர்நெட்டில் புது படங்களை வெளியிடும் நபர் ஒருவரை போலீஸ் கைது செய்தது. இது விஷாலின் நடவடிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் துப்பறிவாளன் ஓடும் திரையர்ங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகள் குடும்ப நலனுக்கு கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்தார்.
இந்த நிலையில், விஷாலின் அறிவிப்பை கிண்டலடிக்கும் வகையில் இயக்குநர் சேரன் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய சேரன், “சங்கம் கொடுத்து வந்த தயாரிப்பாளர்கள் இன்சூரன்ஸ்க்கு பணம் கட்டாம 120 பேருக்கு கேன்சல் செய்ய சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் சூப்பர்ல...ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே.
1.தமிழ் சினிமாவே நான் வரலைன்னா அழிச்சிருக்கும், 2.தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு, 3.விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்.” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலின் போது இயக்குநர் சேரன் சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்து விஷால் அணியை கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...