தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகியாக இருந்தவர் சுசித்ரா. சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கும் சுசித்ரா, நாடகம் மற்றும் சினிமா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, திடீரென்று சினிமா பிரபலங்கள் குறித்து பல சர்ச்சையான தகவல்களையும், அவர்கள் சம்மந்தமான அந்தரங்க புகைப்படங்களையும் சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். நடிகர் தனுஷ், இயக்குநர் ஷங்கர், நடிகை திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்களும், தகவல்களும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு சுசித்ராவின் சோசியல் மீடியா பேஜ் ஹக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், சுசித்ரா மனநிலை பாதித்திருப்பதாக அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்ததோடு, அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சுசித்ரா குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், சென்னை அடையாறு காந்தி நகரில் தங்கியிருந்த சுசித்ரா காணவில்லை, என அவரது அக்கா சுஜிதா போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.
இதையடுத்து, மாயமான சுசித்ரா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அவரை மீட்டு சென்னை அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தன் மீதான கோபத்தினால் தான் சுஜிதா போலீசில் புகார் கொடுத்திருப்பதாக பாடகி சுசித்ரா தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...