ஆந்திர சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார் கூறினார். ஸ்ரீரெட்டியின் புகார் ஆந்திராவில் எடுபடாமல் போனதால் அவர் தற்போத் தமிழகத்தில் செட்டில் ஆகிவிட்டார்.
வீடு, சொகுசு கார் என்று சென்னையில் சொகுசாக வாழும் ஸ்ரீரெட்டி, தற்போது நடிகரும் அரசியல் தலைவருமான உதயநிதி குறித்து ஒரு செய்தியை வெளியிட்டு அது குறித்து விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகராக இருந்த உதயநிதி, தற்போது திமுக-வின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து, அவர் மீதும், திமுக மீதும் களங்கம் ஏற்படுத்த பலர் முயற்சித்து வருவதாக கூறும் திமுக பிரமுகர்கள், ஸ்ரீரெட்டியின் விவகாரமும் அதே வகையை சார்ந்தவை தான் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவும் பிரச்சினைகளை மக்கள் மறந்துவிட வேண்டும், என்பதற்காக ஆட்சியாளர்கள், ஸ்ரீரெட்டி போன்ற நடிகைகள் மூலம் சில பொய்யான தகவல்களை பரப்பி அதன் மூலம் மக்களை திசை திருப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், உதயநிதி மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியிலும் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...