தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளோடும், புதுமையான முயற்சிகளோடும் அவ்வபோது சில படங்கள் வெளியானாலும், கதை, செண்டிமெண்ட், காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படங்களுக்கு என்று தனி இடம் உண்டு. அதிலும், இதுபோன்ற கமர்ஷியல் படங்களை பார்க்க தான் குடும்பத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள்.
அந்த வகையில், விஜய் சேதுபதி நடிப்பில் நாளை (நவ.15) வெளியாக உள்ள ‘சங்கத்தமிழன்’ படமும் குடும்ப ரசிகர்களை குறி வைத்த படமாக உருவாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களங்களிலும், கதாபாத்திரத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்ப்பதற்கான தனது ரூட்டை மாற்ற முடிவு செய்திருக்கிறார். அதன் முதல் படி தான் ‘சங்கத்தமிழன்’. கிராமத்து பின்னணியில், நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த, காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தில் சமூகத்திற்கான விஷயங்கள் குறித்தும் விஜய் சேதுபதி பேசியிருக்கிறாராம்.
மொத்தத்தில், இப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களை திருப்திப்படுத்தும் மாஸ் படமாக இருப்பதோடு, ஃபேமிலி ரசிகர்களை ஈர்க்கும் தரமான கமர்ஷியல் படமாகவும் வந்திருப்பதாக படம் பார்த்த சில விஐபி-க்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...