தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அனைத்துப் படங்களும் ஹிட் என்ற போதிலும், கடைசியாக இயக்கிய ‘அசுரன்’ மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தின் மூலம் வெற்றிமாறனின் புகழ் பாலிவுட் வரை பரவியுள்ளது.
பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கான் ‘அசுரன்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக தகவல் வெளியாக, அதனை தொடர்ந்து வெற்றிமாறனையும் அவர் சந்தித்தார்.
இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விரும்புவதாகவும், அதற்காக அவரிடம் கதை கேட்க தாங்கள் ரெடியாக இருப்பதாக தூதுவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், அஜித் வெற்றிமாறனிடம் கதை கேட்காமல் நிராகரித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் அளித்திருக்கும் பேட்டியில், ஷாருக்கான் தன்னை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியதாகவும், அதில் அசுரன் படத்தில் இருந்த நிறை, குறைகள் குறித்து அவரது கருத்தை கூறினாரே தவிர, ரீமேக் குறித்து எதுவும் பேசவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் மற்றும் விஜயை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தெரிவித்த வெற்றிமாறான், அஜித்தை சந்தித்து தான் கதை சொல்ல முயற்சித்ததாகவும், ஆனால் நேரம் வரும் போது அவரே அழைப்பார், என்ற பதில் தான் அவர் தரப்பில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, கதை சொல்ல விரும்பிய வெற்றிமாறனை அஜித் நிராகரித்திருப்பதை தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...