விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை சிம்புவின் ‘வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில், ஹீரோயின்களாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்க, சூரி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவது லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திர் சந்திரசேகரன் வெளியிடுகிறார். இன்று (நவம்பர் 15) படம் வெளியாவதாக இருந்த நிலையில், விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தர வேண்டிய பழைய பாக்கியால், தற்போது ‘சங்கத்தமிழன்’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
அதன்படி, படம் இன்று வெளியாகவில்லை என்றும், படத்திற்கான முன் பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்று மாலைக்குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...