விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், விஷாலின் புதிய படமான ‘சக்ரா’ படத்தின் பஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கப்பூர், ரெஜினா கேசன்ரா ஆகியோர் ஹீரோயின்களாகன நடிக்கிறார்கள். இவர்களுடன் ரோபோ சங்கர், மனோ பாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்டப் படப்பிட்ப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு இன்று பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...