எப்போதும் கருப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டிருக்கும் இயக்குநரின் படங்கள் சில வெற்றி பெறுவதும், சில தோல்விடைவதும் சகஜமாக இருந்தாலும், அவரது அனைத்து படங்களும் ஒரே ஸ்டைலாக தான் இருக்கும். தற்போது உயரமான நடிகரை வைத்து அவர் இயக்கியுள்ள படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புத்தகங்கள் படிப்பதில் தீவிரம் காட்டும் அந்த இயக்குநர், அவரிடம் பணியாற்றும் பெண் உதவி இயக்குநர்களை கசக்கி பிழிந்தெடுப்பதிலும் தீவிரம் காட்டுகிறாராம். இதனால், எந்த பெண் இயக்குநரும் ஒரு படத்திற்கு மேல் அவரிடம் பணியாற்ற முடியாதம். அந்த அளவுக்கு எப்போதும் ஒரே வேலை... வேலை...என்று படுத்தி எடுத்துவிடுகிறார், என்று அவரிடம் இருந்து வெளியேறிய பெண் இயக்குநர் ஒருவர் கூறி ரொம்ப கவலைப்படுகிறார்.
கருப்பு கண்ணாடி இயக்குநர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எப்படியாவது ஒரு பெண் இயக்குநரை பணியில் சேர்த்துக் கொள்வாராம், அப்படி சேர்த்துக்கொள்ளும் பெண் இயக்குநருக்கு அவர் வேலை வாங்கும் விதம் பிடிக்காமல், அந்த படம் முடிந்தாலோ அல்லது பாதியிலோ எஸ்கேப் ஆகிவிடுவார்களாம், இருந்தாலும் மனுஷன் சலைக்காமல் புதிதாக ஒரு பெண் உதவி இயக்குநரை சேர்த்துக்கொள்வாராம்.
மொத்தத்தில், கருப்பு கண்ணாடி அணியாமல் சில நேரம் இருந்தாலும் இருப்பாராம், ஆனால் பெண் உதவி இயக்குநர் இல்லாமல் இருக்கவே மாட்டார் என்றும் கூறுகின்றனர்
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...