பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்திருக்கும் நிலையில், நான்காம் சீசனுக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பிரபலமான பாய்ஸ் டீம், கவின், தர்ஷன், முகேன் மற்றும் சாண்டி ஆகியோருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதாம்.
தர்ஷன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். முகேன் இசை ஆல்பம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறாராம். இவர்களில் சாண்டி ஏற்கனவே முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிவர். அதேபோல், கவினும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
தற்போது மேலும் பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்றிருக்கும் கவின், ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் முடிந்து ரிலீஸுக்கு காலதாமதம் ஆன போது, தனக்கு வந்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்தவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்ற உறுதியோடு இருந்தாராம். அப்போது கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்ட்டபட்டவர், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினாராம்.
தற்போது, கவின் ஹீரோவாக சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், அவர் நயன்தாராவின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற தகவல் வைரலாகி வருகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...