விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. சூரி, நாசர், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிடுகிறார்.
தொடர்ந்து சிறு படங்களுக்கும், நல்ல திரைப்படங்களுக்கும் ஆதரவு அளித்து வரும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன், பிரச்சினைகளையும் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், துவண்டு போகாமல் சினிமாத்துறையில் பயணித்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று வெளியாக இருந்த ‘சங்கத்தமிழன்’ படத்திற்கும் தயாரிப்பாளர் மூலம் சிக்கல் வர, படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சினைகளை துணிச்சலாக எதிர்கொண்ட விநியோகஸ்தர் ரவீந்தர் சந்திரசேகரன், மாலைக்குள் படத்தை நிச்சயம் வெளியிடுவேன், என்று அறிவித்தார்.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்தவர், நேற்று இரவு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். தற்போது ‘சங்கத்தமிழன்’ தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருப்பதோடு, ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் மாஸ் படமாக உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ ரசிகர்களுக்கான கமர்ஷியல் படமாகவும் இருப்பதால், ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த படமாக இருக்கும், என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்களாம்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...