கமலின் 65 வது பிறந்தநாள் மற்றும் அவரது சினிமா பயணத்தின் 60 ம் ஆண்டை கொண்டாடும் வகையில், ‘உங்கள் நான்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், கோலிவுட்டில் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் நிகழ்ச்சிகாக அழைத்திருந்தது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும், என்று கமல் தரப்பு விரும்பி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. அதன்படி, விஜயும், அஜித்தும் நிச்சயம் கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியிருந்தார்கள்.
ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய் இருவரும் பங்கேற்கவில்லை. இதனால், கமலின் ரசிகர்கள் கடுப்பாகி, தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஒருவரை கெளரவிக்கும் விதமாக நடக்கும் நிகழ்ச்சியில், அஜித், விஜய் கலந்துக் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், விஜய் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாததற்கான காரணத்தை அவர் நடித்து வரும் 64 வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர் படப்பிடிப்பு இருப்பதால், விஜயால் கமல் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லையாம்.
ஆனால், அஜித் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. அதே சமயம், அஜித்தின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் தான் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை, என்ற தகவலும் கசிந்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...