Latest News :

பிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
Monday November-18 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடன இயக்குநரான சாண்டி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் அதிகம் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸில் ரன்னராக வந்த சாண்டிக்கு தனி ரசிகர்கள் வட்டமே உருவாகியுள்ளது.

 

இந்த நிலையில், சாண்டி குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள். இதற்காக சிலர் கட்டணம் வசூலிப்பதும் உண்டு.

 

அந்த வகையில், சாண்டியும் தான் கலந்துக் கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் வசூலித்து வருகிறார். அது தவறில்லை என்றாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும் சாண்டி ஒரு பெரிய தொகையை கேட்டிருப்பது தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

 

சென்னையில் உள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம், அக்குழந்தைகளுக்காக ஆண்டு தோறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சினிமா நடன இயக்குநர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றாம். அந்த வகையில், பிரபு தேவா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருக்கிறார்களாம்.

 

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சாண்டியை பங்கேற்க வைக்க நினைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சாண்டியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அவர் உடனே தனது மனைவியிடம் பேச சொல்லிவிட்டாராம்.

 

அவர்களுடம், சாண்டியின் மனைவியிடம் பேசிய போது, அவரு சில லட்சங்களை கட்டணமாக கேட்டாராம். இது ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், அதைக் கேட்காத சாண்டி தரப்பு, கட்டணம் கொடுத்தால் தான் வர முடியும் என்று கராராக கூறிவிட்டார்களாம்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சாண்டி, அப்போது கட்டணம் வசூலித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும், தற்போது அவர் இதை வைத்த சம்பாதிக்க முடிவு செய்துவிட்டார் போல.

Related News

5888

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை - நடிகர் உதயா
Saturday July-19 2025

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

Recent Gallery