புதுப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே விஷால் நடிப்பில் நேற்று வெளியான ‘துப்பறிவாளன்’ இணையத்தில் வெளியாகியிருப்பது விஷாலை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரித்துள்ள ‘துப்பறிவாளன்’ தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான டிடெக்டிவ் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய், பாக்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.
இப்டம் இணையத்தில் வெளியாவதை தடுக்க விஷால் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார். அதன்படி, இணையத்தில் சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்துக்கொண்டிருந்த நபர் ஒருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், விஷாலின் முயற்சிக்கு சவால் விடும் வகையில் ’தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் நேற்றைய தினம் ‘துப்பறிவாளன்’ படம் வெளியானது. பின்னர் ‘தமிழ்கன்’ இணைய தளத்திலும் படம் வெளியிடப்பட்டது. இதனால், விஷாலும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...