தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்த ‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகியப் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, யோகி பாபுக்கு ஹீரோ வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
ஹீரோவாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சில படங்களில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராக யோகி பாபு நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை காமெடியாக கையாண்டிருப்பார். ஆனால், தற்போது அவர் ஏற்றிருக்கும் வில்லன் வேடம் சீரியஸ் ரகமாம்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் தான் யோகி பாபு வில்லனாக நடிக்கிறார். இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே அதிகமான காமெடி கொண்ட படமாக உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தில் யோகி பாபுவின் வில்லத்தனத்தில் காமெடி கலந்திருந்தாலும், அவரை வில்லனாகவும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் படம் உருவாக உள்ளதாம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக ரசிகர்களை கவர்ந்த நாகேஷ், கவுண்டமணி ஆகியோர், ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நிலையில், தற்போது அதே பாதையில் வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவின் வில்லத்தனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா, இல்லையா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.a
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...