தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் அரங்கேறும் காதல்கள் அனைத்தும் நாடகம் தான் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்ததை மாற்றியவர்கள் கவின் - லொஸ்லியா ஜோடி. இவர்களது காதல் எப்பிசோட்டை பார்த்து, அனைத்து பிக் பாஸ் ரசிகர்களும், இவர்களின் காதல் நிஜம் என்று நினைத்து விட்டார்கள்.
அதற்கு ஏற்றவாறு கவினும், லொஸ்லியாவை விடாமல் காதலிக்க, அவரும் யாருடைய பேச்சையும் கேட்காமல் கவின் பின்னாடியே சுற்றி வந்தார்.
இதற்கிடையில், லொஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும், லொஸ்லியாவின் காதலை தான் முதலில் எதிர்த்தார். இதனால் நிகழ்ச்சி சூடு பிடிக்க, மறுபக்கம் கதறி அழுத லொஸ்லியாவை பார்த்த ரசிகர்கள், அவரின் காதல் நிஜமானது என்றும் நம்பினார்கள். மேலும், கவின் ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போது லொஸ்லியா கதறி அழுததும் அவரது காதலை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், கவினும், லொஸ்லியாவும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம், இருவரும் அவர் அவர் வேலையில் ஈடுபாடு காட்டியதோடு, தாங்கள் காதலித்தவாறு எதையும் காட்டிக் கொள்ளவில்லையாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடந்தது. இதில் கவினும், லொஸ்லியாவும் கலந்துக் கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லையாம். இதனால், இவர்களது காதல் முறிந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், லொஸ்லியா - கவின் காதல் முறிந்துப் போக லொஸ்லியாவின் தந்தை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர் தான் லொஸ்லியாவிடம் நோ காதல், என்று கராராக சொல்லிவிட்டாராம். அதனால், கவினும் தனது வேலையை பார்க்க தொடங்கிவிட்டாராம்.
மொத்தத்தில், பிக் பாஸ் காதல் என்றாலே வெறும் நாடகம் தான், என்பதை கவின் - லொஸ்லியா காதலும் உறுதி செய்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...