Latest News :

நடிகர் சதீஷுக்கு திருமணம்! - பெண் யார் தெரியுமா?
Wednesday November-20 2019

மேடை நாடகங்களில் நடித்து வந்த சதீஷ், ‘தமிழ்ப் படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மதரசாப்பட்டினம், எதிர் நீச்சல், மெரினா போன்ற படங்களில் நடித்தவர், விஜயின் ‘கைதி’ மற்றும் ‘பைரவா’ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகரானார்.

 

இதற்கிடையே, திருமண விஷயத்தில் அவ்வபோது நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட சதீஷ், கீர்த்தி சுரேஷுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டதோடு, படப்பிடிப்பு ஒன்றில் பெண் ஒருவருக்கு தாலி கட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. அப்புகைப்படத்தால் சதீஷுக்கு படப்பிடிப்பிலேயே திருமணம் நடந்ததாக கொளுத்தி போட, அதுவும் டிரெண்டானது.

 

இப்படி திருமண விஷயங்களில் சர்ச்சையில் சிக்கினாலும், தனது திருமணம் குறித்து எந்தவித தகவலும் வெளியாடமல் இருந்த சதீஷுக்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போதும், தனது திருமணம் குறித்து சதீஷ் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.

 

இந்த நிலையில், சதீஷுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அவர் கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் பெண், ‘சிக்ஸர்’ படத்தை இயக்கிய சாச்சி என்பவரின் தங்கையாம். சிக்ஸர் படத்தில் நடித்த போது இயக்குநர் சாச்சியின் வீட்டுக்கு அடிக்கடி போன போது சதீஷுக்கும், இயக்குநரின் தங்கைக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம்.

 

Sathish Marriage

 

தற்போது காதலர்களை தம்பதிகளாக்க இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களுக்கு ரகசியமாக திருமண அழைப்பிதழ் வழங்கி வரும் சதீஷ், பல விஷயங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவார், ஆனால் தனது திருமணம் பற்றி மட்டும் எதுவுமே பதிவிடல்லை, என்று அவரது ரசிகர்களும், சோசியல் மீடியாவில் அவரை பின் தொடர்பவர்களும் வருத்தமடைந்திருக்கிறார்களாம்.

Related News

5898

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை - நடிகர் உதயா
Saturday July-19 2025

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

Recent Gallery