‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் பிரபலமான சூரி, அதன் பிறகு நடித்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகிறார்.
இதற்கிடையே, மதுரையில் பிரம்மாண்டமான சைவம் மற்றும் அசைவம் என இரண்டு ஓட்டல்களை சூரி, சமீபத்தில் திறந்திருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனாவின் வீட்டை நடிகர் சூரி, சுமார் ரூ.6.5 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகையின் மீனாவின் வீட்டு அருகே தான் சூரியின் அலுவலகம் உள்ளது. சூரியின் அலுவலகத்திற்கு அட்ரஸ் சொல்ல வேண்டும் என்றால், நடிகை மீனாவின் வீட்டுக்கு அருகே, என்று தான் சொல்வார்கள். தற்போது அந்த வீட்டையே நடிகர் சூரி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.
அப்படியானால், இனி மீனாவின் வீடு என்று சொல்ல மாட்டார்கள், சூரியின் வீடு என்றே சொல்வார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...