‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் இணைந்த மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைகிறார்கள். ஆனால், இப்போது இணைவது படத்தில் நடிப்பதற்காக அல்ல, ஒரு படத்தின் புரோமோஷனுக்காக.
சதராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை சர்ஜுன் கே.எம் இயக்குகிறார். சி.பி.கணேஷின் டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தர் அண்ணாமலை நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கும் இப்படம் க்ரைம் திரைல்லர் ஜானர் படமாகும்.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதில், படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் விஜய் சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடுகிறார்கள்.
இப்போது புரிந்ததா ‘விக்ரம் வேதா’ கூட்டணி மீண்டும் இணைவதற்கு எதற்காக என்று!
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...