விஜயின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா, நடிகர் விஜயகுமார் - நடிகை சுஜாதா தம்பதியின் மகள் என்பதால் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.
இதையடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்தது. வனிதாவின் இரண்டு திருமணங்களும் தோல்வியடைய அவர் தற்போது தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
நடுவில் நடன இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து படம் தயாரித்தவர் அதிலும் தோல்வியைக் கண்டதோடு, தனது அப்பா விஜயகுமாருடன் சண்டைப்போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட வனிதா, தனது அதிரடி மூலம் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக திகழ்ந்தார். இதனால், அவருக்கு பிரச்சினை என்றதும் அவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ் குழு, மீண்டும் போட்டிக்கு அழைத்துக் கொண்டது.
தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் வனிதா விரைவில் புதிய முயற்சியில் ஈடுபடப் போகிறாராம். அவர் அதை செய்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாகிவிடும், என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதாவது, வனிதா விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறாராம். அந்த சேனல் பயணங்கள் தொடர்பான சேனலாக இருக்கும், என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த தகவலுக்கு பதில் போடும் அவரது ரசிகர்கள், நீங்க ஆரம்பிங்க அக்கா, நாங்க இருக்கிறோம், என்று ஊக்கம் அளித்து வருவதோடு, அக்கா சேனல் வந்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாகிவிடும், என்றும் கமெண்ட் போடுகிறார்கள்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...