Latest News :

ரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர்! - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி
Wednesday November-20 2019

நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தை தொடர்ந்து இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’.

 

‘அட்ட கத்தி’ தினேஷ், ‘கயல்’ ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், ”எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

 

படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பேசுகையில், “தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை  இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

 

இந்தப்படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்,  "நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்" என்றார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

 

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக பண்ணி இருக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.

 

Irandam Ulagaporin Kadaisi Gundu

 

நடிகை ஆனந்தி பேசுகையில், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்த கம்பெனி மாதிரி. நீலம் புரொடக்சன் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் தோழர் நல்ல இயக்குநர் அதைவிட மிகச்சிறந்த மனிதர். இந்தப்படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்குறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றியடையும்.” என்றார்.

 

நடிகர் தினேஷ் பேசுகையில், “சக்ஸஸ் பிஸ்னெஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது. ஒருபடம் ஜெயித்தபிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். ஆடியோ லாஞ்சில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குநர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. இந்தப்படத்திற்காக பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி” என்றார்.

Related News

5901

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை - நடிகர் உதயா
Saturday July-19 2025

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

Recent Gallery