‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தும், இயக்குநர் வினோத்தும் ‘வலிமை’ படத்திற்காக இணைந்திருந்திருக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
படத்தில் அஜித், போலீஸ் அதிகாரியாக நடிப்பதோடு, பைக் ரேஸில் ஈடுபடும் காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளும் அஜித், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ‘வலிமை’ படத்தில் ’ஜேம்ஸ் பாண்ட்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஸ்டண்ட் டிரைவரான பென் காலின்ஸ் என்பவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
படத்தில் இடம்பெறும் பைக் ரேஸ் மற்றும் சேசிங் காட்சிகளுக்காக ஹாலிவுட் நடிகர் பென் காலின்ஸை, ‘வலிமை’ படக்குழு அனுகியுள்ளதாகவும், இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...