பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாவதற்கு காரணம், நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்களின் காதல் கதைகள் தான். கவின் - லொஸ்லியா காதல் ஒரு பக்கம் இருக்க, அபிராமி - முகேன் காதல், இறுதியாக நிகழ்ச்சி முடியும் போது தர்ஷன் - ஷெரீன் காதல் என்று இந்த மூன்று காதல்களாலும் தான் பிக் பாஸ் படு வைரலானது.
ஆனால், தற்போது இந்த மூன்று காதல்களும் டுபாக்கூர் என்று நிரூபனமான நிலையில், அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முகேனை காதலித்ததை பார்த்தால், அவர் முகேன் மீது தீவிர காதலை வைத்துவிட்டதாகவே தெரிந்தது. ஆனால், முகேன் அவரது காதலை நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அபிராமிக்கு ஏற்பட்டதும் டுபாக்கூர் காதல் தான், என்பது தெளிவாகியுள்ளது. காரணம், அபிராமி பள்ளி படிக்கும் போதே முத்தம் கொடுத்ததும், கல்லூரி வந்ததும் டீப்பாக ஒருவரை காதலித்ததும், தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் காதல் குறித்து பேசியிருக்கும் பிக் பாஸ் அபிராமி, கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். மூன்று வருடங்கள் டீப்பாக லவ் போனது. ஆனால், எங்க அம்மாவுக்கு அவரை பிடிக்கவில்லை. அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால், எங்கள் காதல் புட்டுக்கிச்சு, என்றவர், முதல் முத்தம் குறித்து கூறுகையில், பள்ளி படிக்கும் போதே, ஒருவருடன் முதல் முத்தத்தை பகிர்ந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆக, மொத்தத்தில் அபிராமி ஆல் ரெடி கமிட் ஆகி, கழட்டி விடப்பட்டவர் தான் என்பது புரிகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...