சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படப்பிடிப்பில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்த நந்திதா, தற்போது படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.
கிரியேட்டி எண்டர்டெய்னர்ஸ் மற்றும் லலிதா தஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கபடதாரி’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் சிபிராஜ் நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஹீரோயின் நந்திதா, சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.
மேலும், ‘விஸ்வரூபம்’ புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

எம்.ஹேமந்த் ராவ் எழுதிய கதைக்கு, ஜான் மகேந்திரனும், தயாரிப்பாள தனஞ்செயனும் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். ராசா மதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, சைமன் கே.கிங் இசையமைக்கிறார்.
ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் ‘கபடதாரி’ யை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...