Latest News :

நடிகர் சூர்யாவுக்கு கண்டனம்! - ‘குஸ்கா’ பட விழாவில் பரபரப்பு
Friday November-22 2019

எப்.எம் கலைக்கூடம் சார்பில் எஸ்.நாராயணன் மற்றும் எஸ்.சரவணக்குமார் தயாரிக்கும் படம் ‘குஸ்கா’. இயக்குநர் கே.பாக்யராஜ், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மயில்சாமி, பாடகர் வேல்முருகன், அப்புக்குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும்பி.என்.சி.கிருஷ்ணா, இசையமைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். படத்தை இயக்குவதோடு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

 

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் ராம்கி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் சம்பத் உள்ளிட்ட பல திரையுல பிரலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஜாக்குவார் தங்கம், ”மது பழக்கம் தீங்கானது. அது உடலுக்கு மட்டும் அல்ல, தற்போது நடைபெறும் பல பிரச்சினைகளுக்கும் அது தான் காரணம். இன்று மட்டும் 16 கொலைகள் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அத்தனையும் மது போதையினால் நடந்தவைகள் தான். எனவே, இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாக கூடாது. அதே போல், திரைப்படங்களில் ஹீரோக்கள் மது குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது.

 

நடிகர் சூர்யாவின் சமீபத்திய படம் ஒன்றில் அவர் மது குடிப்பது போன்ற காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அகரம் அறக்கட்டளை மூலம் நல்ல விஷயங்களை செய்து வரும் சூர்யா, இப்படி பண்ணலாமா?, உங்களை எத்தனை ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள், அப்படி இருக்க இப்படி பண்ணியது தவறானது.” என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

Related News

5906

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை - நடிகர் உதயா
Saturday July-19 2025

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

Recent Gallery