Latest News :

பார்க்காமல், பேசாமல் இருக்கும் கவின், லொஸ்லியா! - காரணம் இது தானாம்
Saturday November-23 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களாக இருந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. மேலும், இவர்களுக்கு இடையிலான காதல் தான், நிகழ்ச்சியை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. லொஸ்லியாவை கவின் உருகி உருகி காதலித்ததெல்லாம், அம்பிகாபதி, அமராவதியை நேரில் பார்க்க வைத்தது.

 

இதற்கிடையே, லொஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரிக் கொடுத்து, கவினின் காதலில் கல்லை போட்டது போல அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்பாவின் நடவடிக்கையால் கதறி அழுத லொஸ்லியா, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது காதலில் தீவிரம் காட்டினார். மேலும், கவின் போட்டியின் நடுவில் திடீரென்று விலகிய போது, லொஸ்லியா கதறி அழுததை பார்த்து ஒட்டு மொத்த ரசிகர்களும் கண் கலங்கிவிட்டார்கள்.

 

இப்படி வெறித்தனமான காதலை வெளிப்படுத்திய கவின் - லொஸ்லியா ஜோடி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தங்களது காதல் குறித்து ரசிகர்களிடம் தெரிவிப்பார்கள், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள், காதல் குறித்து வாய் திறக்கவில்லை.

 

அதுமட்டும் இன்றி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. இதனால், இருவருக்கும் இடையே இருந்த காதல், வெறும் நாடகமோ! என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல், கவினும் இனி எதிர்காலத்தை பார்க்க வேண்டும், அதற்கு தான் முதலிடம், காதல் எல்லாம் அதன் பிறகு தான், என்று பேட்டிக் கொடுக்க, பிக் பாஸ் காதல், டிராமா காதல் போல, என்று ரசிகர்கள் எண்ணி விட்டார்கள்.

 

இந்த நிலையில், கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், பேசிக் கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம்.

 

ஆம், லொஸ்லியாவின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய அவருடைய அப்பா, கண்டிஷன் ஒன்றையும் போட்டாராம். அதாவது, ஒரு வருடத்திற்கு கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசிக் கொள்ளாமலும் இருக்க வேண்டும். அதன் பிறகும், லொஸ்லியாவுக்கு கவின் மீதும், கவினுக்கு லொஸ்லியா மீதும் காதல் இருந்தால், காதலை தொடரலாமாம், அதற்கு எந்த தடையும் போட மாட்டார், என்பது தான் அந்த கண்டிஷனாம்.

 

அப்பாவின் கண்டிஷனை ஏற்றுக் கொண்ட லொஸ்லியா, தனது காதலின் வீரியத்தை உணர்த்துவதற்காக, தற்போது கவினுடன் பேசாமல் இருக்கிறாராம். கவினும் அதனால் தான் லொஸ்லியாவிடம் இருந்து ஒதுங்கியிருக்கிறாராம்.

Related News

5908

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery