மலையாள நடிகை பாவனாவை கடத்தி கற்பழித்த வழக்கே முடியாத நிலையில், பிரபல மலையாள நடிகையை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர் ஜோஸ் - ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் கம்பீரம், 4 ஸ்டூடன்ஸ், குரு தேவா, வணக்கம் தலைவா, காற்று உள்ளவரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நிலையில், கடந்த் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சினையால், பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே தளசேரி போலீஸ் ஸ்டேஷனில் தனது மாமா மீது புகார் அளித்த பிரணிதி, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் தாத்த வீட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...