நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நேற்று வெளியான இப்படம், தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’-யின் ரீமேக் ஆகும். முதலில் பாலா ‘வர்மா’ என்ற தலைப்பில் இயக்கிய இப்படம் சில காரணங்களுக்காக கைவிடப்பட்டு, பிறகு முதலில் இருந்து எடுக்கப்பட்டது.
இதையடுத்து, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசயா, இப்படத்தின் தலைப்பை ‘ஆதித்ய வர்மா’ என்று மாற்றி எடுத்தார். படம் முடிந்த பிறகும் ரிலீஸில் சில சிக்கல்களை சந்தித்த நிலையில், நேற்று படம் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துருவ் விக்ரமின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய துருவ் விக்ரமை, பத்திரிகைகள் வெகுவாக பாராட்டி வருகின்றது.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.34 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், முதல் நாளிலேயே ‘ஆதித்ய வர்மா’ தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்றை விட, இரண்டாம் நாளான இன்று படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாகவும், அனைத்து திரையரங்குகளிலும் ’ஆதித்ய வர்மா’ ஹவுஸ் புல்லாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், வசூல் இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், முதல் படத்திலேயே நடிப்பு மூலம் பாராட்டுப் பெற்ற துருவ் விக்ரம், வசூலிலும் பல சாதனைகளை படைப்பார் என்று தியேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...