ரூ.25 லட்சத்தை ஏப்பம் விட்ட யோகி பாபு! - கதறும் தயாரிப்பாளர்
Sunday November-24 2019

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் வெற்றி பெற்றதால் தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதோடு, காமெடி வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

தனக்கு வரும் பட வாய்ப்புகள் எதையும் தவறவிடக் கூடாது, என்ற எண்ணத்தில் அனைத்து வாய்ப்புகளையும் யோகி பாபு ஏற்றுக் கொள்வதோடு, சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி விட்டாராம். இருந்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரிடம் தேதிகளை வாங்குவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், யோகி பாபுக்கு கோடி கோடியாய் கொட்டுகிறதாம்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் யோகி பாபுவை தனது படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி அவரிடம் பேசியிருக்கிறார். அவரும், ஓகே சொல்லி சம்பளமாக சுமார் ரூ.50 லட்சம் பேசினாராம். இதையடுத்து அட்வான்ஸாக ரூ.25 லட்சத்தை அந்த தயாரிப்பாளர் யோகி பாபுக்கு கொடுக்க, யோகி பாபு மட்டும் அப்படத்திற்கு தேதிகளை ஒதுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம்.

 

யோகி பாபுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பு தொடங்காததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இருந்தாலும், படத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தாலும், யோகி பாபு மட்டும் தேதியும் கொடுக்காமல், வாங்கிய அட்வான்ஸ் ரூ.25 லட்சத்தையும் திரும்ப கொடுக்காமல், தயாரிப்பாளரை கதறவிட்டிருக்கிறார்.

 

பொருத்து...பொருத்து....பார்த்த தயாரிப்பாளர் விஷயத்தை மீடியாக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்ய, இதனை அறிந்த தயாரிப்பாளர் சங்கம், யோகி பாபுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தற்போது தவிர்த்துவிட்டு, தயாரிப்பாளஎ சங்கத்தின் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறாராம். அதே சமயம், இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், யோகி பாபுவின் அராஜக போக்கினை மீடியாக்களிடம் எடுத்துரைக்கப் போகிறாராம்.

 

யோகி பாபுவால், இப்படி பாதிக்கப்பட்டது இந்த ஒரு தயாரிப்பாளர் மட்டும் இல்லையாம். இவரைப் போல் மேலும் சிலர் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர் தேதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related News

5913

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery